ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணிலின் அரசியல் வாழ்கை நிறைவடைகின்றதா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்வரும் பொது தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ​போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், என்னை ரணில் தனிப்பட்ட ரீதியில் சந்தித்த போது எதிர்வரும் பொது தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என தன்னிடம் தெரிவித்ததாக தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபாதையை நோக்கி பயணிக்க வேண்டுமாக இருந்தால் கட்சியை மீள் கட்டமைக்கவேண்டும். கட்சியின் பொறுப்புக்களில் உள்ளவர்கள் திறமையானவர்கள் இல்லை என தெரிவித்தார்.

மேலும், கட்சியின் தலைமையை சஜித் பிரமதாஸவிடம் ஒப்படைப்பதில் கிக்கல் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்வரும் பொது தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட விட்டால் அவருடைய அரசியல் வாழ்கை முற்றுப்பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக அரசியல் விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – விஜயகலா மகேஸ்வரன்.

wpengine

சஜித் – சம்பந்தன் இடையே முக்கிய சந்திப்பு

wpengine

ரத்ன தேரரின் விகாரைக்கு சென்ற காரணத்தினை வசந்த கூறுகிறார்…

wpengine