உள்நாட்டு செய்திகள்

ரணில் கடுமையான சர்வாதிகாரி எனினும் கட்சிக்காக உழைத்தவர் – தயாசிறி

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையான சர்வாதிகாரி என்ற போதிலும் கட்சிக்காக உழைத்தவர் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ரணில் தரப்பு எதிர்பார்க்கும் வகையில் நாட்டை ஆட்சி செய்ய முடியாது.  வால் தலையை வழிநடத்தும் நிலைமையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அமைச்சுப் பதவிகளை துரத்திச் செல்லப் போவதுமில்லை.

நான் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றிய தீர்மானம் குறித்து குருணாகல் மாவட்ட மக்களிடம் கேட்டறிந்து கொள்வேன்.

மேலும், கல்வி, பொருளாதாரம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே ஒத்துழைப்பு வழங்க முடியும்.

நல்ல திட்டங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கப்படும். ஊழல், மோசடிகள், குற்றச் செயல்கள் சமூக விரோ செயற்பாடுகளுக்கு நாடாளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் எழுப்பப்படும் என தயாசிறி ஜயசேகர கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

(riz)

Related posts

அரச உத்தியோகத்தர்கள் சமூக வலைத்தளம் பாவிப்பது தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு..!

wpengine

19 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

News Editor

சமிந்த விஜேசிறி ராஜினாமா

Azeem Kilabdeen