ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கைத் தீர்மானம்..

எதிர்வரும் 12ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர், பாராளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை என்பதோடு, அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related posts

வெட்டுக்கிளிகளுக்கு போட்டியாக வண்ணாத்திகள்

wpengine

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?

wpengine

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் இராஜினாமா..?

wpengine