கேளிக்கை

ரத்னதீப தேச அபிமான்ய விருது…

மலையக, கலை கலாச்சார அமைப்பு மற்றும் என்.பி.சி வானொலி வலையமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் ரத்னதீப தேச அபிமான்ய விருது விழாவில் சமூக சேவையாளர் எம்.ஏ.எம். ஸப்ரின் இற்கும் இந்த விஷேட விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று(22) வவுனியா, ஓவியா மண்டபத்தில் இடம்பெற்றது.

சுமார் 23 வருட அரச சேவை அனுபவங்களை கொண்ட இவர் தற்போது கைத்தொழில் வர்த்தக அமைச்சில் பதில் நிர்வாக உத்தியோகத்தராக பணிபுரிகின்றார்.

இதற்கு முன்னர் தேர்தல் திணைக்களம், வெளிநாட்டு அமைச்சு பிரான்சில் உள்ள இலங்கை தூதராலயம், மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்து நிறைந்த அனுபவங்களை பெற்றவர்.

அகில இலங்கை சமாதான நீதவானான இவர், நீதியமைச்சின் அங்கிகரிக்கப்பட்ட மும்மொழி மொழி பெயர்ப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் அபுசாலி மற்றும் சுல்பிஹா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் ஆவார்.

 

 

Related posts

திருமண பரிசு பொருட்களை ஏலம் விட தீர்மானம்…

wpengine

ஆலியா மாலைதீவுக்கு…

wpengine

இவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]

wpengine