Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரமித் ரம்புக்வெல்ல கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இலஞ்ச வழக்கில் ரமித் ரம்புக்வெல்ல நேற்று (20) நீதிமன்றத்தால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி ரமித் ரம்புக்வெல்ல இன்று (21) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையான நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை

wpengine

போக்குவரத்து அனுமதிப் பத்திரம் மட்டும் இரத்து

wpengine

அனைத்து மாகாண ஆளுனர்களையும் பதவி விலகுமாறு கோரிக்கை

wpengine