உள்நாட்டு செய்திகள்

ரயில்வே கடவைகளின் ஊடாக பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை…

ரயில்வே கடவைகளின் ஊடாக சட்டத்தை மீறி செல்லும் வாகன சாரதிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில்வே கடவைகளில் சிவப்பு நிற சமிக்ஞை விளக்கு ஒளிர்கின்ற வேளையில் சென்ற 37 வாகன சாரதிகளுக்கு எதிராக 53,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.

இந்த தொகை கடந்த 27, 29 ஆகிய தினங்களில் அறவிடப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை, அழுத்கமை, கொழும்பு, கண்டி ஆகிய இடங்களில் குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளத்தில் நடப்பதும், தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரயில் மிதிபலகையில் பயணிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது திணைக்களத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி அனுர பிறேமரத்ன மேலும் தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்

wpengine

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை

wpengine

சவேந்திர சில்வாவிற்கு தடை – வேல்ஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை

wpengine