உள்நாட்டு செய்திகள்

ரயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் இறக்குமதி

(FASTNEWS|COLOMBO) – இலங்கை ரயில்வே சேவையில் ஒன்றிணைப்பதற்காக எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய நிதி உதவியின் கீழ் குறித்த எஞ்சின்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கு முன்னரும் இந்திய நிதி உதவியின் கீழ் எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் மூன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

மேலும் இவ்வாறான எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் இரண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

wpengine

2.5 மில்லியன் தென்னை மரங்களை பயிரிட திட்டம்

Azeem Kilabdeen

இன்று முதல் விரிவுரைகளில் சமூகமளிக்கவுள்ள மருத்துவ பீட மாணவர்கள்…

wpengine