உலக செய்திகள்

ரஷ்யாவுடன் எந்த வித கூட்டணியும் இல்லை – டிரம்ப் மறுப்பு..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை இரகசியமாக சந்தித்து பேசியதாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“..அது ஒரு சிறப்பான பேச்சுவார்த்தை நான் எதையும் உள்ளே வைத்து மூடி மறைக்கவில்லை. நான் அனைத்து நாடுகளின் தலைவர்களிடமும் தனியாக தான் பேச்சுவார்த்தை நடத்துவேன். பிரதிநிதிகள் யாரும் உடன் இருக்க மாட்டார்கள். அது பற்றி யாரும், எதுவும் கூறியது கிடையாது. ரஷ்யாவுடன் எந்த வித கூட்டணியும் இல்லை என்பதை அனைவரும் அறிவர்..” என தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

மேலும், குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த 2 ஆண்டுகளில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை பலமுறை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை தனது நிர்வாகத்திடம் மூடி மறைத்து விட்டதாகவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

wpengine

லண்டனில் இலங்கையர் ஒருவர் பலி

wpengine

அமெரிக்காவை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்

wpengine