உலக செய்திகள்

ரஷ்யா சவூதி இடையே அணு சக்தி ஒப்பந்தம்

ரஷியா, சவூதி இடையே அணு சக்தித் துறையில் ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்காக இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக துபையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணு சக்தி ஒப்பந்தம், பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேசப் பொருளாதார மாநாட்டின்போது கையெழுத்தானதாக அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சவூதியில் அணு உலைகள், அணு மின் நிலையங்கள் அமைத்தல், அணுசக்தி எரிபொருளை மறு சுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது. மருத்துவம், வேளாண் துறைகளின் பயன்பாட்டுக்கான ரேடியோ ஐúஸாடோப் தயாரிக்கவும் ரஷியா உதவும்.

மேலும், அணுக் கழிவுப் பொருள்கள், கதிர்வீச்சுள்ள கழிவுப் பொருள் தொடர்பான விவகாரங்களிலும் ரஷியா உதவிடும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானில் கார்குண்டு தாக்குதல்- 7 பேர் பலி

wpengine

இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

wpengine

இஸ்ரேலுக்கான தனது தூதரை அழைத்து, அந்த நாட்டுடனான பொருளாதார உறவுகளை நிறுத்திய பஹ்ரைன்..!

wpengine