உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஷ்ய விமானம் குறித்து நாமல் வெளியிட்ட ட்வீட்டர் பதிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவொன்றிலே இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யா இலங்கையுடன் நீண்டகால சுமுகமான உறவை பேணி வருவதாகவும் ஆபத்தான நேரங்களில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது.

கோவிட் தொற்றின் போது கூட ரஷ்யா தொடர்ந்து உதவியதோடு, நமது சுற்றுலாத் துறையையும் புத்துயிர் பெற உதவும் வகையில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்புகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine

மருத்துவ சங்கங்களின் தேவைக்கேற்ப நியமனம் வழங்க முடியாது

wpengine

குப்பைமேட்டில் தீ பரவல்

wpengine