Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜபக்சக்களின் வரிசையில் ரணிலின் பதவி பறிப்புக்கு நாள் குறிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ராஜபக்சர்கள் மக்களால் எப்படி விரட்டப்பட்டார்களோ அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி விரட்டியடிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. எச்சரித்துள்ளார்.

காலிமுகத்திடல் மக்கள் போராட்டம் ஜூலை 14ஆம் திகதி வெற்றியுடன் முடிந்து விட்டது என்றும், அதன் பின்னர் அங்கு கிளர்ச்சிக்கான ஆயத்தங்களே நடைபெற்றன என்றும், அதனையே படையினர் அடக்கியுள்ளனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

கொழும்பு – காலிமுகத்திடலில் அன்றும் போராடியவர்கள் மக்கள்தான். இன்றும் போராடுபவர்கள் அதே மக்கள்தான். இந்நிலையில், அமைதி வழியில் போராடும் மக்களைக் கிளர்ச்சியாளர்கள் என்று பொய் கூறி அவர்கள் மீது ஆயுதப் படைகளைக் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மாபெரும் அராஜகம் ஆகும். இது போராடும் மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ரணில் வீட்டுக்குப் போ’ என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை. இதற்கு மதிப்பளித்து ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகி வீட்டுக்குச் செல்ல வேண்டும். இல்லையேல் ராஜபக்சர்கள் போல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 9ஆம் திகதி மக்களால் அவர் வீட்டிற்கு விரட்டியடிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச விலகியிருந்தார். ஜூன் 9ஆம் திகதி பசில் ராஜபக்ச விலகியிருந்தார். ஜூலை 9ஆம் திகதி கொழும்பில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தால் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த 14ஆம் திகதி பதவி விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

Azeem Kilabdeen

மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்

wpengine

அரசியலில் இருந்து விலகவேண்டும் என்று விரும்புகிறேன்! – அழுகையுடன் கூறிய கீதா குமாரசிங்க

wpengine