ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜபக்ஷக்கள் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ள சீனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் ராஜபக்ஷக்கள் ஆட்சியை பிடிப்பதற்காக கைகொடுத்த சீனா, தற்போது அவர்களின் கன்னத்திலேயே அறைய ஆரம்பித்து இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

சீனத் தூதரகத்தால் இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே பாலித ரங்கே பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் ராஜபக்ஷக்கள் அரசை கொண்டு வருவதற்காக சீனா ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக நாட்டில் தமக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, தற்போது இலங்கை மக்கள் வங்கியை சீனத் தூதரகம் கறுப்புப் பட்டியலில் இணைத்தமை, சீன அரசு அல்லது சர்வதேசம், ராஜபக்ஷ அரசாங்கத்தை கறுப்புப் பட்டியல் சேர்ப்பதற்கு சமமானது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த அரசாங்கம் பெண்களை உதாசீனம் செய்கின்றது [VIDEO]

wpengine

நடிகரை மணக்கும் தொகுப்பாளினி

wpengine

பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ள அகிலவின் உலகக் கிண்ணம் தொடர்பில் பியல் கருத்து…

wpengine