உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜாங்க அமைச்சர்களின் துறைகள் வர்த்தமானி ஊடாக அறிவிக்க உத்தேசம்

ராஜாங்க அமைச்சர்களின் துறைகள் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட உள்ளது.

அனைத்து ராஜாங்க அமைச்சர்களுக்கும் துறைகளையும் துறைசார் நிறுவனங்களையும் ஒதுக்கீடு செய்து அதனை வர்த்தமானி ஊடாக அறிவிக்க அரசு தீர்மானித்துள்ளது.

அண்மைக் காலமாக ராஜாங்க அமைச்சர்களுக்கும் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இடையில் நிலவி வரும் கடுமையான முரண்பாட்டு நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் துறைகளை ஒதுக்கீடு செய்யத் தவறியுள்ளமையினால் ராஜாங்க அமைச்சர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராஜாங்க அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தேவையான துறைகள் மற்றும் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து தகவல்களை வழங்குமாறு ராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் நேற்றைய தினம் அறிவித்துள்ளார்.

விரைவில் ராஜாங்க அமைச்சர்களின் துறைகள் வர்த்மானியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்

wpengine

புனித நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

wpengine

நன்றியில்லா வீரர்களை நினைவூட்டிய டில்ஷானின் மனக்கவலைக்கு மஹேல சங்கா தீனி..

wpengine