உள்நாட்டு செய்திகள்

ரூ.79 மில்லியன் பெறுமதியான ‘ஐஸ்’ கைப்பற்றல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தலைமன்னார் – ஊருமலை கடற்கரையில் 79 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் (Crystal Methamphetamine -ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படை முகாமினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது நேற்று (14) நள்ளிரவு ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 9.9 கிலோ ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

படகொன்றில் போதைப்பொருளை கொண்டு வந்த போது, 28 மற்றும் 36 வயதுடைய தலைமன்னார் ஊருமலை பகுதியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

Related posts

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

Azeem Kilabdeen

ரணிலுக்கு மஹநாயக்க தேரர்கள் ஆசி

wpengine

நாட்டுக்குள் புகுந்தது “புரெவி” புயல்

wpengine