விளையாட்டு

ரொனால்டோவுடன் பலமுறை உறவு வைத்தேன் – பாடசாலை மாணவியின் அதிர்ச்சி தகவல்

போர்த்துக்கல் கால்பந்து அணியின் வீரர் ரொனால்டோவின் காதல் முறிவுக்கு நான் தான் காரணம் என்று ஒரு கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக இகினா ஷாய்க் என்ற 29 வயது மொடல் அழகியை காதலித்து வந்தார்.

போட்டி இல்லாத நேரங்களில் இருவரும் பல நாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்தனர். மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாக இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இவர்கள் பிரிந்து விட்டதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

மேலும், இருவரும் தீவிரமாக காதலித்த போது இகினாவின் செல்போனுக்கு பெண்கள் செய்தி அனுப்பினர். அதில் ரொனால்டோவுக்கு தங்களுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இதைத்தொடர்ந்து ரொனால்டோவின் செல்போனை இகினா சோதனை செய்தபோது அந்த தகவல் உறுதியானது. இதனால் இகினா தனது காதலர் ரொனால்டோவை விட்டு நிரந்தரமாக பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரொனால்டோவின் செல்போனில் என்னுடையை குறுஞ்செய்திகளை பார்த்த பிறகே அவர்கள் பிரிந்து விட்டதாக பிரேசில் மாணவி டயானா 29, என்பவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறுகையில், “எனக்கும் ரொனால்டோவுக்கும் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பல முறை வீடியோ சாட் செய்து பேசியுள்ளோம்.

கடைசியாக 2014ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியின் போது சந்தித்துக் கொண்டோம். அப்போது கூட நாங்கள் இருவரும் ஒரு இரவில் 3 முறை உறவு வைத்துக் கொண்டோம்.

மேலும், கிறிஸ்மஸ் இற்குப் பிறகு நான் அவரை தொடர்பு கொண்ட போது தான் என்னை பற்றி இகினாவுக்கு தெரிய வந்தது. இதனாலே இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பிறகு ரொனால்டோ என்னை தொடர்பு கொள்ளவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மொடல் அழகி இகினா ஷாய்க், தற்போது நடிகர் பிரட்லி ஹுப்பருடன் சுற்றி திரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

யூரோ கிண்ணம் : போட்டியில் இத்தாலிக்கு இறுதி வாய்ப்பு

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்…

wpengine

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு 10 ஆண்டுகள் விளையாடத் தடை..

wpengine