கேளிக்கை

ரொமான்டிக் காமெடி கலந்த படத்தில் பிக்பாஸ் ஜோடி…

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி கலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

Related posts

இறந்த தன் மகளை மீண்டும் கண்டு உருகிய தாய் [VIDEO]

wpengine

மனைவியிடம் சவால் விட்டு செயற்கையாக பிரசவ வலி உணர்ந்த கணவன் – கண்ணீர் கலந்த அன்பில் முடிந்த நிகழ்வு…

wpengine

2018 ஆஸ்கர் விருது – சிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற The shape of water…

wpengine