ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

லசித் மாலிங்கவிடம் இருந்து நுவன் குலசேகருக்கு அழைப்பு…

(FASTNEWS | COLOMBO) – ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்தும் படு தோல்வியினை சந்தித்து வரும் இலங்கை அணிக்கு லசித் மாலிங்க போன்றதொரு இன்னுமொரு திறமையான வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தேடும் பணியில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கிரிக்கெட் தேர்வுக் குழுவினால் இலங்கை அணியின் வீரர்களுள் ஒருவரான நுவன் குலசேகரவை மீளவும் தேசிய அணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த தகவலை அறிந்த நுவன் குலசேகரவின் சகாவான லசித் மாலிங்க நுவனுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் இணையத்தளங்கள் லசித் மாலிங்கவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்போது, நலம் விசாரித்த மாலிங்க, தற்போது இலங்கை அணி முகங்கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில் நுவனின் ஒத்துழைப்பு அவசியம் எனக் கோர, அதற்கு மறுபதில் இன்றி உடனே நுவன், அணியுடன் இணைய தான் எந்நேரத்திலும் தயார் எனத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சஜித் பிரேமதாசவுக்கு ஐ.தே.கட்சியில் பபுதிய பதவி…

wpengine

கழிவறை கட்டாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

wpengine

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ரூ.700 கோடி நிதியுதவியை இந்தியா நிராகரிக்கிறது…

wpengine