உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லலித் – அனுஷ தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு..

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்லிட ஆகியோர், தமக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இன்று(11) மேற்முறையீடு செய்துள்ளனர்.

2015ம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி சில் துணிகளை விநியோகம் செய்ததாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த 7ம் திகதி இவர்கள் குற்றவாளிகள் என தீர்மானித்த கொழும்பு மேல் நீதிமன்றம், மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதித்தது.

இந்நிலையில் குறித்த இந்த தீர்ப்பை எதிர்த்து, இன்று(11) இருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

(rizmira)

Related posts

இறக்குமதி செய்யப்படும் பழவகைகளில் மனித உடலுக்கு ஆபத்து விளைவிக்கும் இரசாயன திரவம் கலப்பு…

wpengine

பசிலின் பிணை மனு விசாரணை, சட்டமா அதிபர்மற்றும் FCID க்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தினை அண்டி வாழும் மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை..

wpengine