உலக செய்திகள்

லிபியாவில் அகதிகள் படகு விபத்து 50 பேர் பலி…

லிபியாவில் அகதிகள் படகு கடலில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளதாக லிபியா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு போர் நடைபெறும் நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி பலர் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர். அவ்வாறு வருபவர்களின் படகுகள் கடலில் மூழ்கி விபத்துக்கள் நடைபெறுகின்றன.

இதேவேளை ஷுவாரா நகர கடல் பகுதியில்சென்ற போதே கடலில் படகு மூழ்கியுள்ளதுடன் அதில் பயணம் செய்த 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  35 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவன நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் மத்திய தரைக் கடல் வழியாக 1 லட்சம் அகதிகள் இத்தாலி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதுடன், 2,400-க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லெபனானை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாரிய தீ

wpengine

மொபைல் ஸ்கேன் மூலம் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு; தமிழகத்தை உலுக்கிய பரபரப்பு சம்பவம்!

wpengine

ஈராக்கில் ஐ.எஸ் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 35 பேர் பலி

wpengine