Top Story 2உள்நாட்டு செய்திகள்

வங்கிகள் – காப்புறுதி சேவைகள் அத்தியாவசிய சேவை பிரிவுக்குள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி, வணிக வங்கி, திறைசேரி மற்றும் காப்புறுதி சேவை என்பன அத்தியாவசிய சேவை பிரிவுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி, ஏனைய வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கிளைகள், திறைசேரி என்பனவற்றை திறந்து வைத்திருக்குமாறு, ஜனாதிபதி செயலாளரினால், மத்திய வங்கி ஆளுநருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஊடரங்கு சட்டம் அமுலாகும் காலப்பகுதியில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் அலுவலகத்தினரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு…

wpengine

கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கைது…

wpengine

100 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் – சந்தேக நபர் கைது

wpengine