உள்நாட்டு செய்திகள்

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான வழக்கு மீளப்பெறப்பட்டது.. – தற்காலிக தடையும் நீக்கம்..

எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு திரும்ப பெறப்பட்டுள்ளது.

முன்னதாக எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மனுதாரர்களால் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் பைசர் முஸ்தபா இன்று(30) பாராளுமன்றத்தில் கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட, வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக, அறிவிக்கக் கோரி, கடந்த 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை
அடுத்து உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் 4ம் திகதி வரை தற்காலிக தடை விதித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறத்தது.

அதன்படி இன்று(30) குறித்த இந்த வழக்கு மீளப் பெறப்பட்டதையடுத்து வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்ட தற்காலிக தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

####..

Related posts

சிறைச்சாலைகளில் CCTV கமெரா பொருத்தும் திட்டம் கைவிடப்பட்டது.

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு – விடுதலை கோரி துமிந்தவும் மேன்முறையீடு.

wpengine

இங்கிலாந்து, முதலாவது இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 336 ஓட்டங்கள்…

wpengine