உள்நாட்டு செய்திகள்

வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதிகளில் சுகாதார வழிகாட்டிகளை உரிய வகையில் கடைபிடிப்பது மிகவும் முக்கியமானது என பிரதி பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை போன்ற குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையிலான காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டிகளை மீறியமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,363 ஆகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

Related posts

வேன் குடைசாய்ந்து விபத்து – 3 பேர் மருத்துவமனையில்

wpengine

7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும்

wpengine

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம்…

wpengine