உள்நாட்டு செய்திகள்

வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) -நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் பேசிய அவர்,

“… கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை காரணமாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஓரளவுக்கு சீர்குலைந்தாலும் நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி அமோக வெற்றியை பெறும்..” என்றும் மைத்திரி நம்பிக்கை வெளிட்டுள்ளார்.

Related posts

ரிஷாத் பாதுகாப்பு முறைகளுக்கு அமைய பாராளுமன்றுக்கு [VIDEO]

wpengine

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது

wpengine

தபால் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆயத்தம்…

wpengine