உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வஸீம் தாஜுடீனின் இறுதி மரண விசாரணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

றகர் வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்க்கு முதல் காரணம் நினைவற்ற நிலையும், தீயினால் ஏற்பட்ட காபன் மோனோசைட் வாயு உட்சேர்ந்ததும் என்று கொழும்பு முன்னாள் நீதிமன்ற விஷேட பேராசிரியர் ஆனந்த சமரசேகர வஸீமின் இறுதி மரண விசாரணையின் போது அறிக்கை தெரிவித்துள்ளார்.

நீதிமன்றில் சமர்ப்பித்த சான்றுகளுக்கமைய தீப்பிடிக்கும் போது வஸீம் உயிருடன் இருந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தாஜுடீனின் இரத்தத்தில் அதிகளவு எதனோல் கலக்கப்பட்டும், சம்பவத்திற்க்கு இரு மணித்தியாலங்களுக்கு முன்பதாக மதுபானம் உட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாஜுடீனின் உடற்காயங்கள் துப்பாக்கியினால் தாக்கியுள்ளதாக நம்பப்படுகின்றது.

மேலும், தாஜுதீன் காபன் டயக்சைட் காரணாமாகவே உயிரிழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

 

Related posts

நீர்கொழும்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 02 பேர் வைத்தியசாலையில்..

wpengine

சரத் வீரசேகர இன்று அமைச்சராக பதவியேற்பு

wpengine

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை…

wpengine