கேளிக்கை

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்…

`அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே எதிர்பார்பை அதிகரித்துள்ள இப்படம் துருவ் விக்ரம், பாலா என அடுத்தடுத்த தகவல்களால் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

`சில்லுனு ஒரு காதல்’ படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் ஷ்ரியா சர்மா. எந்திரன்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருந்தார்.

“அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஷாலினி பாண்டே நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அக்ஷரா ஹாசனிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நாயகி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி

wpengine

நார்வே, சுவிஸ் நாட்டிலும் காலா படத்துக்கு தடை…

wpengine

நாகார்ஜுனா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 12 கோடி கேட்கிறாராம்

wpengine