கேளிக்கை

விஜயுடன் ஜோடியாய் நடிக்க ஆசை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கேரளத்து பெண் தான் Reba Monica John. ஆனால் -படித்தது, வளர்ந்தது பெங்களூரில். மலையாளத்தில் வினித் சீனிவாசனின் ‘ஜேக்கப்பிண்ட ஸ்வராஜ்யம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து விட்டு ‘ஜருகண்டி’ மூலம் தமிழுக்கு வந்தார்.

‘ஜருகண்டி’ படம் நல்ல வரவேற்பை பெறாததால் ரெபாவை (Reba) தமிழ் ரசிகர்கள் கவனிக்கவில்லை.

அதற்கெல்லாம் சேர்த்து வைத்து ‘பிகில்’ படத்தில் திகில் கிளப்பி விட்டார்.

ஒரு தலைக் காதல் காரணமாக ஆசிட் வீசப்பட்டு முடங்கிக் கிடந்தவர், கோச் விஜய்யின் தன்னம்பிக்கை வார்த்தைகளால் மீண்டும் களமாடி வெற்றி காணும் அனிதாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

“விஜய் சாருக்கு ஜோடியாக நடிக்கணும்னுதான் எனக்கும் ஆசை. அந்த நாளும் சீக்கிரம் வரும்னு நம்புறேன். அதுக்கு முன்னாடி அவர் படத்துல நான் நடிச்சதன் மூலம் அவரை நெருங்க முடிஞ்சுது, அவரோட பழக முடிஞ்சுது, அவர் அட்வைஸ் கேட்க முடிஞ்சுது. நான் அவரோட ரசிகை. இதை அவர்கிட்டேயே சொல்லிட்டேன்…” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

அனுராக் காஷ்யப் மீது Me too

wpengine

பரீட்சைத் தாளில் கோஹ்லியின் காதலி குறித்த வினா…

wpengine

விரிந்து பறக்காத வரை சிறகுகளும் பாரம் தான் – “பென்சில் ஸ்கெட்ச்” அப்ஸன் ஒரு கண்ணோட்டம்

wpengine