வாழ்க்கை

வித்தியாசமான முறையில் முள்ளு முறுக்கு…

முள்ளு முறுக்கு செய்வது மிகவும் சுலபம். ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இந்த முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – ஒரு கப்,
உளுத்த மாவு – ஒரு டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
பிறகு மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் போட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முள்ளு முறுக்கு ரெடி.

Related posts

வயதில் கூடிய பெண்களை மணக்கும் ஆண்களுக்கு….

wpengine

முகத்திற்கு அடிக்கடி tissue பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்பு..

wpengine

கருப்பான பெண்கள் எப்படி மேக்கப் போடலாம்?

wpengine