உள்நாட்டு செய்திகள்

விமலின் தேசிய சுதந்திர முன்னணி பாரிய வெற்றி – 5வர் பாராளுமன்றத்திற்கு தெரிவு

பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஐவர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து இம்முறை தேர்தலில் களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

தேசிய சுதந்திர முன்னணி கட்சியில் இருந்து நாடளாவிய ரீதியில் 11 பேர் மட்டுமே களமிறக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த ஐவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த ஐவரும்;

விமல் வீரவங்ச (கொழும்பு), வீரகுமார திசாநாயக்கா (அநுராதபுரம்), நிரோஷன் பிரேமரத்ன (மாத்தறை), ஜெயந்த சமரவீர (களுத்துறை), பத்ம உதயசாந்த (மொனராகலை) ஆகியோரே இம்முறை வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தகது.

(riz)

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

இளைஞர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம் – வழக்கு ஒத்திவைப்பு

wpengine

சிறுபான்மை வாக்குப்பலத்தை செல்லாக்காசாக்க முயற்சி

wpengine