உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

விற்பனைக்கு வருகிறது அதிக புரதம் அடங்கியுள்ள கரப்பான்பூச்சிப் பால்

கரப்பான் பூச்சியிலிருந்து பால் எடுக்கமுடியும் என்றும், எதிர்காலத்தில் இந்த பால் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது என்றும், பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள்  தெரிவித்துள்ளனர்.

பொதுவாக அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களின் குஞ்சுகளுக்கு ஒருவித பாலையே உணவாக அளிக்கிறது. அந்த பாலில்தான் புரோட்டின் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்த பால், நமது எருமைப்பாட்டின் பாலில் உள்ள புரதத்தை விட 3 மடங்கு அதிகம் என்றும், அதிக கலோரி நிறைந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அந்த கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பாலில், மனிதர்களுக்கு தேவையான அமினோ அமிலங்களும் அடங்கியிருப்பதால், எதிர்காலத்தில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது..

wpengine

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு…

wpengine

இதுவரை எவ்வித தீர்மானமும் இல்லை

wpengine