கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் வில்பத்து மற்றும் மன்னார் உள்ளிட்ட வனப்பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றியமை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் வன விலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் வெளியீடான ‘வாரண’ சஞ்சிகை வெளியீட்டின் 25 வது பதிப்பு ஜனாதிபதியிடம் நேற்று கையளிக்கப்பட்ட போதே அவர் இக்கருத்தினை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி, மீள்குடியேற்றங்களின் தன்மை குறித்து விபரித்தார்.
இவ்வேளை, ஜனாதிபதி முதல் தடவையாக அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நேற்று சந்தித்ததுடன், மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.