உள்நாட்டு செய்திகள்

விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான அனைத்து வரிகளும் நீக்கப்படும் – ஜனாதிபதி..

விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள் மீதான சுங்க வரி நீக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்’ என்ற நிகழ்வு கெக்கிராவ திப்பட்டுவவ நீர்த்தேக்கத்துக்கு அருகில் இன்று(06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளின் நன்மை கருதி தேசிய உணவு உற்பத்தி வாரத்தில் தொழில் நுட்ப உபகரணங்களுக்கான வரி நீக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்கள் இந்த வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

(rizmira)

Related posts

வருமானமிழந்த பேரூந்து ஊழியர்களுக்கு நிவாரணம்

wpengine

புதிய வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன சத்தியப்பிரமாணம்..

wpengine

ஐ.தே.கட்சியுடன் இணைகிறது கூட்டு எதிர்க்கட்சி..

wpengine