உள்நாட்டு செய்திகள்

வீதித் தடையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம்…

நேற்று(25) தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த வீதித் தடையை மீறி பயணித்த வேன் ஒன்று மீது பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று(26) அதிகாலை குடாவெல்ல சந்தியில் வைக்கப்பட்டிருந்த வீதித் தடை ஊடாக பயணித்த வேன் வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சமிஞ்சை அளித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வேன் வாகனத்தின் சாரதி அதனை பொருட்படுத்தாது தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

பின்னர் , வேன் வாகனம் தப்பிச் சென்றுள்ளதுடன், வேன் வாகனத்தின் உரிமையாளரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

wpengine

மாணவர்களுக்கு UGC இனால் அறிவிப்பு

wpengine

முல்லைத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு…

wpengine