ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வீதியில் கண்டெடுத்த 78 இலட்சம் ரூபா பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த பெண்

ஜேர்­ம­னியைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் வீதியில் கண்­டெ­டுத்த  48,000 யூரோ (சுமார் 78 இலட்சம் ரூபா) பணத்தை பொலிஸார் மூலம் உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார்.

கொலோன் நக­ரி­லுள்ள வீதி­யொன்றில் கிடந்த பையொன்றை பெண்ணொ­ருவர் திறந்து பார்த்­த­போது அதற்குள் 48,000 யூரோ பணம் இருப்­பதை அறிந்து அவர் வியப்­ப­டைந்தார்.

அவ்­வே­ளையில் அப் ­ப­கு­தியில் மேற்­படி பணத்தின் உரி­மை­யா­ளர்கள் எனக் கரு­தக்­கூ­டிய எவரும் இருக்­க­வில்லை. இவ்­வா­றான நிலையில் இப்­பணத்தை நாமே வைத்­துக்­கொண்டால் என சப­லப்­புத்தி சில­ருக்கு ஏற்­படும். ஆனால், மேற்­படி பெண், அப்­ பணத்தை அரு­கி­லுள்ள பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்துச் சென்று அதி­கா­ரி­க­ளிடம் ஒப்­ப­டைத்தார்.

அப்­ பையை ஆராய்ந்த அதி­கா­ரிகள் அதற்குள் இருந்த அடை­யாள அட்­டை­யொன்றின் மூலம் அதன் உரி­மை­யா­ளரை இனங்­கண்டு அந்­ ந­ப­ருடன் தொடர்­பு­கொண்­டனர்.

பின்னர் 52 வய­தான நபர் ஒருவர் பொலிஸ் நிலை­யத்­துக்குச் சென்று அப்­
ப­ணத்தை பெற்­றுக்­கொண்டார்.  32 வயதான பெண்­ணொ­ரு­வரே நேர்மையுடன் இப்­ ப­ணத்தை பொலிஸ் நிலை­யத்­துக்கு கொண்டு சென்றிருந்தார்.

பணத்தை தொலைத்து மீளப்­ பெற்­றுக்­கொண்ட நபர் ஜேர்மன் சட்ட விதி­களின் படி அப் பெண்ணுக்கு 1450 நயரோ (சுமார் 24,000 ரூபா) வெகுமதியாக வழங்கினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ITN பதற்ற நிலையினை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசார் களத்தில்..

wpengine

சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி

wpengine

மஹிந்தவுக்கு வீடு செல்ல ஹெலிகொப்டர் வழங்கியது நான் என ஜனாதிபதி மைத்திரி 2016 ஏப்ரல் கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக… [Video]

wpengine