உலக செய்திகள்

‘பாரம்பரிய ஆடைகளை தவிருங்க!’ ஐக்கிய அரபு எமிரேட் எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டவர், பாரம்பரிய ஆடைகள் உடுத்துவதை தவிர்க்கும்படி, அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்துக்கு கடந்த வாரம், ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த தொழிலதிபர், அஹமது அல் மெனாலி, மருத்துவ சிகிச்சைக்காக சென்றார். தன் நாட்டு பாரம்பரிய ஆடை அணிந்திருந்த அஹமது, ஓட்டலில் தங்கிஇருந்தபோது, அரபி மொழியில், தொலைபேசியில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த ஓட்டல் ஊழியர், அவரை பயங்கரவாதி என நினைத்து போலீசுக்கு தகவல் தந்தார்.

இதையடுத்து, அஹமதுவை, துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்தனர்; பின், ஆயுதம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார், அஹமதுவை விடுவித்தனர். இந்த சம்பவம், தனியார், ‘டிவி’ சேனலில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் குடிமக்கள், அரேபியர்களுக்கான பாரம்பரிய உடை அணிவதை தவிர்க்க வேண்டும்’ என, ஐக்கிய அரபு எமிரேட் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெண்கள், முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு, சில ஐரோப்பிய நாடுகளில் தடை உள்ளது. ‘அந்த தடை உத்தரவை ஐக்கிய அரபு பெண்கள் மதித்து நடக்க வேண்டும்’ என்றும், அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

Related posts

டிசம்பர் 31 முதல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம்..

wpengine

பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு…

wpengine

அலபாமாவில் கருக்கலைப்புக்கு தடை…

wpengine