உள்நாட்டு செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதி கோருகிறார் கம்மன்பில..

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கடவுச் சீட்டு நீதிமன்றத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் திருமண நிகழ்வு ஒன்றுக்கு இந்தியா செல்லவுள்ளதாகவும் மேலும் ஜப்பான் நாட்டில் இடம்பெறவுள்ள கருத்தரங்கு ஒன்றுக்கும் செல்லவுள்ளதாகவும் அதற்கான அனுமதியை வழங்குமாறும் உதய கம்மன்பில தனது சட்டத்தரணி மூலம் இன்று நீதிமன்றதில் கோரிக்கை விடுத்துள்ளார்..

உதய கம்மன்பிலவின் கோரிக்கை தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 9 ஆம் திகதி பதிலளிக்கப்படும் என கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனமொன்றின் பங்குகளை மோசடியான முறையில் எட்டோனி பத்திரத்தின் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலைச் செய்யப்பட்ட உதய கம்மன்பிலவின், கடவுச் சீட்டை கடுவலை நீதவான் நீதிமன்றம் பறிமுதல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

ரூ.16,060,000 பெறுமதியுடைய ஹெரோயீனுடன் கட்டுநாயக்கவில் பாகிஸ்தான் பிரஜை கைது..

wpengine

அங்கொடை லொக்காவின் உதவியாளர் கடுவலை பபி கைது…

wpengine

சமூக வலைத்தளமான முகநூல் செயற்பாடுகளை முடக்க அரசு தீர்மானம் – ராஜித…

wpengine