ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து சிவப்புச் சமிஞ்ஞை…

(FASTGOSSIP | COLOMBO) – வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் தமது எல்லையை மீறிச் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தியினை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலத்தில் நேற்று(06) ஊடக பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சில வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது எல்லையை மீறுகிறார்கள். எதற்காக பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை வைத்திருக்கிறேன் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அவர்களுக்கு நான் ‘சரியான முறையில்’ பதிலளித்தேன். மூன்று அமைச்சுக்களுக்கு மேல் நான் வைத்திருப்பதற்கு அனுமதியில்லை. இருந்தாலும், எத்தனை நிறுவனங்களையும் வைத்திருக்க முடியும்.

வர்த்தமானி அறிவிப்பின் மூலமாக எந்தவொரு அரச நிறுவனத்தையும் நான் எனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியும்.

பொலிஸ் திணைக்களத்துக்கு மேலதிகமாக, அரசாங்க அச்சக திணைக்களத்தையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வடிவேலு காமெடி மாதிரி செஞ்சுட்டாங்க! ஹெலிகாப்டர் கேட்ட நிவேதா

wpengine

அரசாங்கத்தில் பங்கு வகிப்போம் ; அமைச்சு பதவிகளை ஏற்க மாட்டோம் : சஜித் பிரேமதாச

wpengine

மாலிங்க உள்ளிட்ட ஐவருக்கு கரீபியன் பிரீமியர் லீக் தொடருக்கு வரம்

wpengine