உள்நாட்டு செய்திகள்

வெள்ளை வான் தாக்குதல் விசாரணை மேர்வின் அதிருப்தி

வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

வெள்ளை வான் கடத்தல்கள், கொலைகள், நிதி மோசடிகள், குற்றச் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தமக்கு தெரிந்த அனைத்து விடயங்கள் பற்றிய தகவல்களையும் முறைப்பாடாக எழுதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடத்தி உரிய முறையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் யார் செயற்பட்டார்கள் என்பது பற்றிய விபரங்களை தாம் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே, யார் குற்றவாளிகள் என்பது பற்றி தொடர்ந்தும் பேசுவதற்கு தாம் விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால் தமக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டால் விசாரணைகளில் பங்கேற்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், சட்டத்தை மதித்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஆயுதங்களுடன் மாவனல்லை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் கைது…

wpengine

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று கூடுகிறது…

wpengine

நாளை இறுதித் தினம் – மஹிந்த

wpengine