விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போட்டித் தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல ஒருநாள் சாதனைகளுக்கு சொந்தக்காரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு

wpengine

50 இலட்சம் இந்திய ரூபாவுக்கு விலைபோன அகில தனஞ்சய

wpengine

இலங்கை அணியின் முன்னாள் பயிற்சியாளர் ப்ருஸ் யார்ட்லி உயிர் துறந்தார்…

wpengine