ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வேட்பாளர்கள் மூவர் ஒன்றிணைய திட்டம்?; அனுர குமாரவின் அதிரடி ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, தேசிய அபிவிருத்தி முன்னணியின் வேட்பாளர் தொழிலதிபர் ரொஹான் பல்லேவத்த ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகி மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் அனுர குமார திஸ்ஸநாயக்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, தேர்தலில் இருந்து விலக முடிவு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒன்றிணைவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுவதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இரண்டு வேட்பாளர்கள் அனுர குமார திஸ்ஸநாயக்கவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்கு வங்கிகளில் வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மகரகம ஆங்கில ஆசிரியர் : 3 பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு

wpengine

சந்திமாலின் துடுப்பாட்டம் நிச்சயமற்ற நிலையில்…

wpengine

உலகின் அழகிய நாயான ‘BOO’உயிரிழப்பு…

wpengine