உள்நாட்டு செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் – துமிந்த..

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து எவரும் கட்சி தாவ மாட்டார்கள் என குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க நேற்று(20) சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார்.

சாதாரணமாக குடும்ப வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், அவற்றை வீட்டிற்குள்ளேயே தீர்க்க வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் உள்ளக ரீதியான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தனியாக கட்சியொன்றினால் செய்ய முடியாமல் போனதை பிரதான இரண்டு கட்சிகள் இணைந்து நாட்டிற்கு செய்திருப்பதாகவும், அது கட்சியின் தீர்மானம் என்றும் எவரும் கட்சியை விட்டு வௌியேறுவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

 

(rizmira)

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பாதயாத்திரை குறித்து பிரதமருக்கு அவசர அழைப்பு.

wpengine

கட்டுகஸ்தோட்டை, திகனையில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்!

wpengine

உள்ளூராட்சி மன்றங்களுக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்

wpengine