உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து…

இன்று(11) நடைபெறவிருந்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடுத்த செயற்குழு கூட்டத்தை நடத்துவதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம்(09) ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கூடியது.

இதன்போது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்கள், தாம் வகிக்கும் அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகுவதற்கு மத்திய செயற்குழுவின் அனுமதியை கோரியிருந்தனர்.

அதுதொடர்பான அனுமதியை வழங்குவதற்கான இன்று(11) மத்திய செயற்குழு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லாட்சி அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த விலகத் தீர்மானம்..?

wpengine

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine

GSP வரிச் சலுகை இந்த ஆண்டுடன் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவிப்பு..

wpengine