உள்நாட்டு செய்திகள்

ஷங்கிரிலா தற்கொலைதாரியின் நிறுவனம் கொலோஷியஸ் என அறிந்திருக்கவில்லை..

(FASTNEWS | COLOMBO) – கொழும்பு – ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய முஹமட் இன்ஷாப் இனது நிறுவனம் கொலோஷியஸ் என தான் அறிந்திருக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று(29) தெரிவித்திருந்தார்.

“மூலப்பொருட்களை வழங்குவது எமது கடமை. குறித்த பிரச்சினையின் பின்னரே குறித்த தகவல்களும் வெளியே வந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். எங்காவது பிழை இருப்பின் தண்டனை வழங்க வேண்டும்.

இன்ஷாப் எனும் நபர் எச்சந்தர்ப்பத்திலும் என்னை சந்தித்து, அவரது நிறுவனம் தொடர்பில் கூற வந்ததில்லை. நீங்கள் நம்பலாம் இல்லாது நம்பாமல் இருக்கலாம்…”

இன்ஷாப் இனது நிறுவனத்திற்கு எல்லை மீறியளவு காலி துப்பாக்ககளுக்கான தோட்டாக்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்ட குற்றச்சாட்டினை மறுத்து இது தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

 

R.Rishma

Related posts

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி

wpengine

நாளையதினம் நாட்டுக்கு வரும் கோட்டாபய!

wpengine

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் ராஜினாமா..!

wpengine