Uncategorized

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்கும் பிளாக்பெரி நிறுவனம்

ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு சவாலாக விரைவாக முன்னேறி வந்த நிறுவனமாக பிளாக்பெரி காணப்படுகின்றது.

எனினும் அண்மைக்காலமாக இந்நிறுவனம் மிகவும் சொற்ப அளவிலேயே புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் கைப்பேசிகள் ஏனைய கைப்பேசிகளினை விடவும் பாதுகாப்பு தன்மை கொண்டவை என்பது தெரிந்ததே. விசேடமாக இக்கைப்பேசிகளை ட்ராக் (Track) செய்ய முடியாது.

இவ்வாறிருக்கையில் தனது ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்ந்தும் மேற்கண்ட பாதுகாப்பினை கொண்டிருப்பதாக அந்நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

இதற்கு காரணம் ஆய்வுக்குழு ஒன்று இக்கைப்பேசிகள் மின்னஞ்சல்களை என்கிரிப்ட் (Encrypt) செய்திருந்த போதிலும் அவற்றினை வாசிக்கக்கூடியதாக இருந்தது என்று புகார் அளித்திருந்தமையாகும்.

Related posts

சோதனைக்குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு இயற்கை ஆண் குழந்தை

wpengine

சர்வதேசக் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர்

wpengine

வளர்ப்பு நாய் கணவனுக்கு கொடுத்த பதிலடி

wpengine