ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை – சீனா : முறுகல் நிலை ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பயணிகள் பயணித்த விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக மாத்திரமே கொழும்பில் தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதாக சீன தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

23 பயணிகளுடன் கடந்த 7ஆம் திகதி டுபாயில் இருந்து ஷங்காயிற்கு பயணித்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 866 எனும் விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மாத்திரமே நிறுத்தப்பட்டதாகவும் இதில் பயணிகள் விமானத்திற்குள் உட்பிரவேசிக்கவோ வெளியேறவோ இல்லையென சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் ஷங்காய் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போது அதில் பயணித்த பயணிகள் 23 பேருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளின் விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சீனா நேற்றையதினம் (13) அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘ இங்கிலாந்து வீரர்கள் ஆச்சரியமானவர்கள்.. ஹோட்டலில் அடியாட்களை கூட ‘சார்’ என்றே அழைக்கின்றனர்’ – இலங்கை அணியின் முகாமையாளர் கருத்து…

wpengine

வரதட்சனை கொடுக்காததால் மனைவியை ஆபாச பட இயக்குனருக்கு விற்ற கணவர்

wpengine

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

wpengine