உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கியமை சிறந்ததே – அர்ஜுன

தம்மை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கியமை தொடர்பில் கவலை கொள்ளவில்லை என்று அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், இதுவரை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் ஒரு உறுப்பினராக இருந்தமைக்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டார். தற்போது அந்த கட்சி ஒழுக்கமற்றவர்களால் கையேற்கப்பட்டுள்ளதாகவும் ரணதுங்க தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்தவும் அனுரபிரியதர்சன யாப்பாவும் கொலையாளிகளுக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கும் வேட்புரிமை வழங்கியுள்ள நிலையில் தாம் அந்தக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டமையானது மிகச்சிறந்தது என்றே கருதுகிறேன்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று பண்டாரநாயக்கவின் கொள்கைகளை பின்பற்றவில்லை. ஊழல் கொள்கைகளையே பின்பற்றுகிறது என்றும் அர்ஜூன குற்றம் சுமத்தினார்.

(riz)

Related posts

களு கங்கை பெருக்கெடுக்கும் மட்டத்தில் – கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு அறிவுறுத்தல்..

wpengine

மரம் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்தல் – கால எல்லை இன்றுடன்(28) நிறைவு…

wpengine

அமைச்சரவை எப்போது? பிரதமரிடம் அனுர

wpengine