உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் ஆண்டு விழாவுக்கான அழைப்பு இம்முறை மஹிந்தவுக்கு இல்லை..

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டு விழாவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இம்முறை அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து கோட்டை, பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில், இடம்பெற்ற நிகழ்வுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது ஆண்டுவிழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, ஒன்றிணைந்த எதிரணியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும், உறுப்பினர்கள் பலருக்கும், குறித்த இந்த ஆண்டு விழாவுக்கான அழைப்பிதழ்கள் கிடைக்கவில்லை என அறிந்தேன்..” என அவர் கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு..!

wpengine

ரணிலின் ரீட் மனு விசாரணைக்கு

wpengine

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்

wpengine