உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் வருட நிறைவை முன்னிட்டு நாளை முதல் சமய நிகழ்வுகள்…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 67 ஆவது வருட நிறைவை முன்னிட்டு நாளை(02) முதல் பல்வேறு சமய நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

முதலாவது சமய நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (02) மாலையும், இந்து மத சமய நிகழ்வுகள் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் ராமணாதன் தலைமையில் பம்பலப்பிட்டி திரேஷன் கோவிலில் நடைபெறவுள்ளது.

இஸ்லாமிய சமய பிரார்த்தனை நிகழ்வுகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் மாளிகாவத்தை பள்ளிவாயலிலும், மற்றது இராஜாங்க அமைச்சர் பௌஸி தலைமையில் தெவட்டகஹ பள்ளிவாயலிலும் நடைபெறவுள்ளன.

கிறிஸ்தவ சமய ஆராதனைகள் முன்னாள் பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவின் தலைமையில் சிலாபம் பெரிய ஆலயத்தில் எதிர்வரும் 03 ஆம் திகதி காலை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆதிவாசி பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு

News Editor

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாட தீர்மானம்

wpengine

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine