உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்ட சம்பவம் – விசாரணைகள் ஆரம்பம்..

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று முன்தினம்(06) ஹம்பாந்தோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் இடைநடுவே ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் காவல்துறை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த தினம் குறித்த இடத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ள நிலையில், காணொளி பாதிவுகளை பயன்படுத்தியும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இதனுடன் உயர் காவல்துறை அதிகாரியொருவரால் ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதி காவல்துறைமா அதிபர் ஒருவரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ரூவான் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் நீக்கம்…

wpengine

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி இறையெய்தினார்

wpengine

ஒல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine