உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு புதிய ஒப்பந்தம்…

அரச மற்றும் தனியார் கூட்டிணைப்புடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முதற்கட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்துகத்துறை அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையினுடாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கம் – சீன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற ‘சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்’ நிறுவனத்துக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தால் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பின்னர் இது தொடர்பான் இருதரப்பினருக்கிடையே இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

wpengine

ஷாபி வழக்கு நடவடிக்கை மதியம் 01 மணி வரைக்கும் ஒத்திவைப்பு

wpengine

போதகருக்கு ஒரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டமா? – சாணக்கியன்

wpengine