உள்நாட்டு செய்திகள்

ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு…

தங்க பொருட்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவை பெப்ரவரி 09ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு தங்காலை நீதிமன்ற நீதவான் இன்று(26) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும் குறித்த காலப்பகுதியில் வங்கியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹஷினி ரத்நாயக்க கடந்த 9ஆம் திகதி தங்காலை காவல் நிலையத்தில் முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அறிவித்தல்

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் நவவியின் இடத்துக்கு முஹம்மட் இஸ்மாயில்…

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு

wpengine